'நெல்லை' தங்கராஜ் வயது 63.
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்ததன் மூலம் 'நெல்லை' தங்கராஜ் மிகவும் பிரபலமடைந்தார்.
'நெல்லை' தங்கராஜ், கணியன் கூத்து நடிகர் ஆவார்.
இவர் கூத்து இல்லாத நேரங்களில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வந்தார்.
பரியேறும் பெருமாள் படத்தில் வரும் 'எங்கும் புகழ் துவங்க' பாடல் இவரை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்றது.
இவர் மனைவி, மகளுடன் வசித்து வந்தார்.
இவர் உடல்நலக்குறைவால் இன்று (பிப். 3) மறைந்தார்.