பிரதாந்த் நீல் 'கேஜிஎஃப்' படத்திற்கு பிறகு இயக்கி வரும் மிகப்பெரிய படம் 'சலார்'.
இந்த படம் கேஜிஎஃப் படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் முதலில் செப்டம்பர் 28, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், தொழில்நுட்ப சிக்கல்களைக் காரணம் காட்டி தயாரிப்பாளர்கள் சலார் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சலார் மாற்றம் காரணமாக அந்த தேதியில் வேறு சில படங்கள் வெளியாகிறது.
சலார் படத்திற்கு ரவி பாசூர் இசையமைக்க, எடிட்டிங் உஜ்வல் குல்கர்னி மேற்கொண்டுள்ளார்.