ஏண்டா இந்த படத்தை விட்டோம் என நினைத்த ஹீரோக்கள்

';

சாந்தனு

பாய்ஸ், சுப்ரமணிய புறம், காதல் இந்த மூன்று படங்களிலும் சாந்தனு நடிக்கவிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் இந்த மூன்று மெஹாஹிட் படங்களில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

';

விஜய்

விஜய் தன் கெரியரில் பல நல்ல கதைகளை மிஸ் செய்திருக்கிறார். அதில் முதல்வன், அனேகன், சிங்கம், சண்டக்கோழி, ஆட்டோகிராப், ரன் போன்ற சூப்பர்ஹிட் படங்களை மிஸ் செய்தது ஆச்சரியமாக இருக்கிறது.

';

ஜெய்

நாடோடிகள், எஸ்எம்எஸ், ராட்சசன், விண்ணைத் தாண்டி இப்படி நான்கு மெகா ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணதாக அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

';

சிம்பு

கோ படத்தில் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தான். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

';

அஜித் குமார்

சூப்பர்ஹிட் கஜினி படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அஜித்தால் நடிக்க முடியாமல் போனது.

';

விக்ரம்

பம்பாய் படத்தில் அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தில் முதன் முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்தது, ஆனால் அப்போது அவர் வேறு படத்தில் பிஸியாக நடித்திருந்தால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

';

அப்பாஸ்

விஜய், ஷாலினி நடிப்பில் உருவான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது அப்பாஸ் தான். ஆனால் கதை பிடிக்காமல் போனதால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

';

விஜய் சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான். ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதி அந்த கேரக்டரை செய்ய முடியாமல் போனது.

';

VIEW ALL

Read Next Story