விஜய் வெங்கட் பிறகு இயக்கத்தில் Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார்.
GOAT படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
மார்ச் மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் தளபதி 69 படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
விஜய்யின் முந்தைய படங்கள் வெளியாகும் முன்பே அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், விஜய் அரசியலில் நுழைய போவதால் அடுத்த படம் நடிக்கவில்லை என்றும், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக விஜய் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் RRR படத்தை தயாரித்த DVV Entertainment விஜய்யிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.