ஆடிப்பூரத்தில் அன்னைக்கு வளைகாப்பு! ருது நீராடல்! திரு ஆடிப்பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே!

Malathi Tamilselvan
Aug 07,2024
';

ஆழ்வார்

ஆடிப்பூர நாளன்று ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார். பெருமாளின் மேல் கொண்ட பக்தி காதலாக கசிந்துருக, அவரையே மணாளனாக நினைத்து பாடல்கள் இயற்றி ஆழ்வாராக உயர்ந்த பக்தை அவதரித்த நாள்...

';

ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஆண்டவனுக்கு தொடுத்த மாலைகளை ஆண்டாள் தான் சாற்றி அழகு பார்த்த பிறகே ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைபபராம், அதை பெருமாளும் மனமுகந்து ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்.

';

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம்

';

திருப்பாவை

ஆண்டாளின் திருப்பாவை, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன. வைணவ சம்பிரதாயத்தில் ஆண்டாளுக்கும் அவரது பக்தியில் கசிந்துருகும் திருப்பாவைக்கும் முக்கிய இடம் உண்டு

';

திருப்பதி

வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டின் 11 மாதங்கள் அதிகாலையில் சுப்ரபாதம் பாடி பெருமாளை துயிலெழுப்பினால், மார்கழி மாதம் மட்டும் திருப்பாவை ஒலிக்கும் என்பது ஆண்டாளின் பக்திக்கு கொடுக்கப்படும் மரியாதை

';

ஆடிப்பூரம் விழா

வைணவக் கோவில்களில் மட்டுமல்ல, அனைத்து ஆலயங்களிலும் ஆடிப்பூரம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

';

வளைகாப்பு

அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததாக ஐதீகம். அதை நினைவூட்டும் வகைய்லி ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வளையல்களை அணிவிப்பது வழக்கம்

';

முளைக்கொட்டு விழா

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் 'முளைக்கொட்டு விழா' பிரசித்தி பெற்றது. ஆடிப்பூர நாளன்று இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு 'ஆடி வீதி' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story