பருப்பை சிவப்பு துணியில் கட்டி பூஜையில் வைத்து, அட்சய திருதியை மறுநாள் காலையில் தானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
நிதி நெருக்கடியில் இருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் கங்கை நீரை நிரப்பி அதன் வாயை வெள்ளை துணியால் கட்டி, பூஜை அறையில் வைத்து, இந்த தண்ணீரை தொடர்ந்து 7 நாட்களுக்குவீட்டில் தெளிக்கவும்.
நீர் மோர் தானம் செய்வது அதிர்ஷ்டத்தைத் தரும். பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை பச்சை துணியில் சுற்றி வைப்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.
முத்து அணிய வேண்டும். ஒரு வெள்ளி நாணயம் இட்ட கலசத்தை கிழக்கு நோக்கி வைத்து, அடுத்த நாள், இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பதால் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.
அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட வேண்டும். வெல்லம் தானம் செய்வது அதிர்ஷ்டத்தை பலப்படுத்தும்.வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் நீடித்து இருக்கும்.
காய்கறிகள் மற்றும் நீர் மோர் தானம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளையும் நீக்கி, நிதி ஆதாயத்துடன், திருமண அம்சமும் வலுவடையும்.
வாழ்க்கையில் எப்போதும் மகிமையும் செழிப்பும் இருக்க வெள்ளை நிற ஆடை, அரிசி, முத்து போன்றவற்றை தானம் செய்யலாம்.
கண்ணாடி பாட்டிலில் தேனை நிரப்பி சிவப்பு துணியில் கட்டி பூஜையில் வைத்து , அட்சய திருதியையின் மறுநாள் அதனை ஏழைக்கு தானம் செய்வதால் வாழ்க்கையில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது.
மஞ்சள் துணியில் மஞ்சளைப் கட்டி, வைத்து வழிபட்டால், வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். லட்டுக்களை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து விநியோகிப்பது நிதி சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும்.
லட்சுமி தேவியை மகிழ்விக்க எள்ளை ஒரு பாத்திரத்தில் நிரப்பி கருப்பு துணியில் போர்த்தி வைத்து கிழக்கு திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்.
அட்சய திருதியை அன்று, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும். இது தவிர, இரும்பு, எள், தேங்காய் தானம் செய்யலாம்.
கடுகு மற்றும் வெள்ளி நாணயத்தை மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது நிதி முன்னேற்றத்தை தரும். கடன் இருந்தால், அதிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.