ஏழரை சனியின் பிடியில் சிக்கினால் படும் கஷ்டங்கள் என்பது வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடியது. இந்நிலையில், ஹனுமனை வழிபடுவதன் மூலம் ஏழரை சனியின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்
மேஷ ராசிக்காரர்கள் அனுமன் கவசம் பாராயணம் செய்தால் சனி தோஷங்களில் இருந்தும் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்தும் விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.
ரிஷபம் ராசிகள் ஹனுமான் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ராமாயணத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
மிதுன ராசிகள் ஆரண்யக் காண்டம் பாராயணம் செய்யவும். இதற்குப் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றிவதோடு, பசுவுக்கு உணவளிக்கவும்.
கடக ராசிக்காரர்கள் ஹனுமான் கவசத்தை பாராயணம் செய்து, மலர்களால் ஹனுமனை பூஜித்து, அந்த மலர்களை நீர் நிலைகளில் சேர்க்கவும்.
சிம்ம ராசிக்காரர்கள் தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமனின் படத்தின் முன் நெய் விளக்கை ஏற்றவும்.
துலாம் ராசிக்காரர்களும் சுந்தர காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.
விருச்சிக ராசிக்காரர்கள் ஹனுமனின் ஆசி பெற, ஹனுமான் அஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு ராசிக்காரர்கள் அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு வெண்ணை சாற்றி வழிபடவும்.
மகர ராசிக்காரர்கள் கிஷ்கிந்தா காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு சிவப்பு பயறு பிரசாதம் செய்து நைவேத்தியம் செய்யலாம். அதோடு மீன்களுக்கு உணவளிக்கவும்.
கும்ப ராசிக்காரர்கள் உத்தர காண்டம் பாராயணம் செய்யவும். மேலும், ஹனுமான் இனிப்பு வகை ஒன்றை தயாரித்து பிராசாதத்தை விநியோகிக்கவும்.அதை எறும்புகளுக்கு உணவளிப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
மீன ராசிக்காரர்கள் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.