சிம்மத்தில் வக்ரமான புதனின் அருளால் பொன்னான வாய்ப்பைப் பெறும் ராசிகள்! 24 நாட்களுக்கு இராஜவாழ்க்கை தான்...

';

ஞானக் காரகர்

புதன் ஒருவரின் அறிவாற்றல், புத்திசாலித்தனம், கூர்மையான சொல்லாற்றல் கலைகள் என ஒருவரின் மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கும் கிரகம் ஆகும்

';

புதன்

கிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், வலிமையான சிம்ம ராசியில் தனது பாதையை மாற்றி இயங்குவது 4 ராசிகளுக்கு பணமழையில் நனைய வைக்கும்

';

லட்சுமி கடாட்சம்

புதன் பகவான் சிம்ம ராசியில் வக்ர கதியில் தற்போது இயங்கிவருகிறார். இந்த இயக்கம் சில ராசிகளுக்கு லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்

';

திருவெண்காடு

புதன் பகவானின் தலமான திருவெண்காட்டில் உள்ள புதன் பகவானை, அனைத்து ராசிக்காரர்களும் வணங்கினால், நல்ல பலன்கள் அதிகரிக்கும், கெடுபலன்கள் குறையும்

';

விநாயகர்

முழுமுதற் கடவுள் என்று போற்றப்படும் கணபதிக்கு உரிய நாளான புதன்கிழமையில் விநாயக வழிபாடு விக்னங்களைத் தீர்க்கும். கஜமுகனின் அருளால் புதனின் முழுமையான ஆசீர்வாதமும் கிடைக்கும்

';

சிம்ம ராசி

24 நாட்கள் சிம்மராசியினருக்கான நாட்கள் என்றே சொல்லலாம். உங்கள் பேச்சால் பிறர் ஈர்க்கப்படுவார்கள், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கைப் பெறும். வேலையிடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், தொட்டதெல்லாம் துலங்கும்

';

மிதுனம்

சிம்மத்தில் புதனின் வக்ரகதி இயக்கம், மிதுன ராசியினருக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். குடும்பத்தினரிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்

';

துலாம் ராசி

புதனின் வக்ரகதி இயக்கம், துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண நிலுவைகள் வந்து சேரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது. முதலீடு செய்வதற்கு நல்ல காலம் இது, திருமண வாழ்க்கை இனிக்கும்

';

தனுசு

புதனின் வக்ரகதி இயக்கம், தனுசு ராசியினரின் மனதில் உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். தடைபட்ட காரியங்கள், தங்குதடங்கலின்றி நிறைவேறும். முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story