சிம்மத்தில் புதன்... மேஷம் முதல் மீனம் வரை....சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்..!!

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

புதன் பெயர்ச்சி

2024 ஜூலை 19ம் தேதி, இரவு 8:30 மணிக்கு கிரகங்களின் இளவரசன் புதன், கடக ராசியிலிருந்து, சிம்ம ராசிக்குள் நுழைவார். இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குகிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

மேஷம்

வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும், செழிப்பும் உண்டாகும். சுகபோக, ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடின உழைப்பு பலன் தரும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

ரிஷபம்

தொழிலில் மகத்தான வெற்றியை அடைவார்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

மிதுனம்

வாழ்வில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.பேச்சில் இனிமை இருக்கும். கடின உழைப்பு காரணமாக சிறந்த வெற்றியை பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

கடகம்

நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். உறவுகளில் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

சிம்மம்

வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல பொன்னான வாய்ப்புகள் அமையும்.பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

கன்னி

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். வேலையில், தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். நிதி இழப்பு ஏற்படலாம். உறவுகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

துலாம்

கனவுகள் அனைத்தும் நனவாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

விருச்சிகம்

முக்கியமான பணிகளை நிறைவு செய்ய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் சவால்கள் அதிகரிக்கும். உறவுகளில் சச்சரவுகள் வரலாம். இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

தனுசு

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் உண்டாகும். உங்கள் உடல்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

மகரம்

வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். அதிகப்படியான செலவுகளால் மனம் கலங்கும். நிதி விஷயங்களில் மிகவும் யோசித்து முடிவுகளை எடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிதும் அலட்சியம் காட்டாதீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

கும்பம்

மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக வரும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். பல சிரமங்களுக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையின் உடல்நிலை குறித்த கவலை அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

மீனம்

வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். வெற்றி கனி கையில் கிடைக்க போராட வேண்டியிருக்கும். கடன் சுமை அதிகரிக்கலாம். எனவே, பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 19, 2024

VIEW ALL

Read Next Story