புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

';

புதன் பெயர்ச்சி

புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் ஏப்ரல் 9 ஆம் தேதி, அதாவது இன்று மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆவார். இதனால் அதிகப்படியான நன்மை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதன் பெயர்ச்சி சுப பலன்களை கொண்டு வரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதன் சஞ்சாரம் நல்ல செய்திகளை கொண்டு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகமாகும். பண வரவு அதிகமாவதால் நிதி நிலை மேம்படும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமான நடந்து முடியும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் அமைதி கிடைக்கும்.

';

துலாம்

இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் கடன் குறைய ஆரம்பிக்கும். சட்ட சிக்கல்கள் இருந்தால் அவற்றில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்கள் இப்போது குணமாகும்.

';

தனுசு

இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கக்கூடும். வியாபாரத்தில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.

';

கும்பம்

மீனத்தில் புதனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்கள் அதிக பயன் பெறுவார்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story