தற்போதைய வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, புகை பழக்கம் போன்றவற்றினால், நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்கிறது. இதனால், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் தொற்று போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

நுரையீரல்

நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளை எடுத்துக் கொள்வதன மூலம் நுரையீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கலாம்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பினோலிக் கலவைகள் மற்றும் பிளவனாய்டுகள் காற்று பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் அவை நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எளிதில் குணமாக வழி வகுக்கிறது. இதிலுள்ள ஆக்சிஜனேற்ற குர்செடின், ஆன்ட்டி ஹிஸ்டமைன் ஆக செயல்படுகிறது.

';

மீன்கள்

மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் நாட்பட்ட நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நுரையீரல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் எனும் கலவை நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் மரபணு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. காற்று பாதைகளை சீராக்கி நுரையீரலை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

';

வெல்லம்

வெல்லம் நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் சேர்மங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்துக்கள் காரணமாக நுரையீரல் செயல்பாடு எளிதாக நடக்கிறது.

';

பூண்டு

மூன்று பல் பூண்டுகளைப் வாரத்திற்கு இரண்டு முறை உட்கொண்டவர்களை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைவு என்று ஆய்வில் கூறப்படுகிறது.

';

நட்ஸ்

முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை உடலுக்கு தேவையான மெக்னீசியத்தைப் தருகின்றன. இது நமது சுவாச பாதைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

';

வெர்ஜின் ஆலிவ்

வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், நுரையீரலில் ஏற்படும் திசு சேதத்தை தடுக்கவும் உதவுகிறது.

';

தண்ணீர்

நுரையீரல் வலுவாக இருக்க, ஒரு நபர் நிறைய தண்ணீர் உட்கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நபர் 8 முதல் 11 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

';

VIEW ALL

Read Next Story