பாகற்காய்

பாகற்காய் மிகவும் கசப்பானது தான். ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை ஏதோ ஒரு வடிவில் எடுத்துக் கொள்வது, இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

';

அளவிற்கு மிஞ்சினால்

பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.

';

பாகற்காய்

பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளவதை யாரெல்லாம் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

';

இதய ரத்த ஓட்டம்

பாகற்காய் அதிக அளவில் சாப்பிடுவதால் இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரு புறமே செல்லும். இதனால் இரத்த கட்டிகள் உருவாகி மாரடைப்பு அல்லது பக்க வாதத்தை ஏற்படுத்துகிறது.

';

சீரற்ற இதய துடிப்பு

அதிக அளவு பாகற்காய் ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுத்தும். அதிகம் சாப்பிடுவதால் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும். அதிகப்படியாக வியர்வை உண்டாகும். சிலருக்கு மயக்கம் கூட வரும்.

';

சிறுநீரக நோய்

அளவுக்கு அதிகமாக பாகற்காய் சாப்பிடுவதால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு மிகவும் எச்சரிக்கை தேவை.

';

நச்சுத்தன்மை

பாகற்காயில் Tetracyclic Triterpenoid கலவை உள்ளது. இதில் உள்ள நச்சுத்தன்மையினால் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.

';

மாதவிடாய்

பாகற்காய் சாறு அதிகம் உட்கொள்வதால், மாதவிடாய் சுழற்சி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

';

கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும், எனவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

';

கல்லீரல்

பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தால், பாகற்காய் சாப்பிடக்கூடாது.

';

இரத்த சர்க்கரை

பாகற்காய் நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தும் என்பதால், இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது.

';

நீரிழிவு மாத்திரை

நீரிழிவு மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயையும் சாப்பிடும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவவை மிகவும் ஆபத்தான முறையில் குறைக்க வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story