சிவகுமரனுக்கு வைக்கும் விரதங்கள் மூன்று வகைப்படும். வாரந்தோறும் இருப்பது, திதியின் அடிப்படையில் இருப்பது மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் இருக்கும் விரதம் என முருகனுக்கு 3 வித விரதங்கள் இருப்பது சிறப்பானது
வார விரதத்தில் செவ்வாய்கிழமை விரதம் முக்கியமானது என்றால், நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்த கார்த்திகை நட்சத்திர விரதம் சிறப்பானது. அதேபோல அறுமுகனுக்கு சஷ்டி விரதம் சிறப்பானது
முருகனுக்கு இருக்கும் விரதங்களில் கிருத்திகை விரதம் மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் என்ன? தெரிந்துக் கொள்வோம்
வழக்கமாக விரதங்களை அவற்றிற்குரிய திதியில் துவங்க வேண்டும். ஆனால் கிருத்திகை விரதத்தை, கிருத்திகைக்கு முன்பு வரும் பரணி நட்சத்திரத்திலேயே துவங்க வேண்டும்.
கிருத்திகை விரதம் இருப்பவர்கள், பரணி நட்சத்திரத்தன்று பகல் உணவு உண்ட பிறகு, இரவு உணவு உண்ணக்கூடாது. கிருத்திகை விரதத்தை பரணி நட்சத்திரத்தன்றே துவக்க வேண்டும்
நட்சத்திரம் வந்ததும் அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்த பிறகு, அன்று மாலையில் பூஜை செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்
கிருத்திகை விரதத்திலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று இருக்கும் விரதம் மிகவும் சிறப்பானது
முருகனை வளர்த்த 6 கார்த்திகை அன்னையர் மீதும் பாசம் கொண்ட முருகன், அந்த நட்சத்திரத்தன்று விரதம் வைத்தால், தாயைப் போல பரிவுடன் நமது குற்றம் குறைகளை நீக்குவார் என்பது நம்பிக்கை