முக்தி தரும் சிவராத்திரி வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள்! ஆலயத்திற்கு தானம் செய்வது சாலச் சிறந்தது!

';

மகா சிவராத்திரி

மாதா மாதம் அனுசரிக்கப்பட்டாலும், மாசி மாதம் சிவாலயங்களிலும் கொண்டாடப்படும் பெருவிழாவாகவே திகழும் மகா சிவராத்திரி நாளை உலகம் முழுவதும் பக்தியுடன் அனுசரிக்கப்படும்

';

சிவபூஜை

சிவராத்திரியன்று இரவில் நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளையும் பார்த்து கண் துஞ்சாமல் சிவபூஜை செய்பவர்களுக்கு சிவகதி கிடைக்கும்

';

பூஜை பொருட்கள்

சிவபெருமானின் அருளை பெறுவதற்கும் நாம் நினைத்தது நிறைவேறுவதற்கும் சிவராத்திரி நாளன்று எந்த பொருட்களை பூஜைக்கு தர வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

';

விபூதி

சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை நெற்றியில் பூசுபவர்களின் மனதிற்கு தெளிவு கிடைக்கும். சிவனுக்கு நடைபெறும் நான்கு கால பூஜைக்கு திருநீறு எனப்படும் விபூதியை வாங்கி தருவது நல்லது. மனதில் அமைதி கொடுக்கும் விபூதி அபிஷேகத்தை தரிசிப்பதும் நல்லது

';

வில்வம்

திரிசூலத்தின் குறியீடாக கருதப்பம் வில்வம், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. வில்வ இலைகளை சிவபூஜைக்கு கொடுப்பது என்பது முக்தியைத் தரும்

';

பால் அபிஷேகம்

பால் நீண்ட வாழ்வை கொடுக்கும். பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், பால் அபிஷேகம் செய்வது ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்வதாக கருதப்படும். எனவே சிவராத்திரி நாளன்று பால் அபிஷேகத்திற்காக பால் வாங்கிக் கொடுப்பது நல்லது

';

சந்தனம்

சுகத்தைக் கொடுத்து வாழ்க்கையில் பெருமையை சேர்க்கும் சந்தன அபிஷேகத்திற்கு சந்தனத்தை வாங்கிக் கொடுப்பது வாழ்க்கையில் உயர்வைத் தரும்

';

மார்ச் 7

மகா சிவராத்திரி இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் நாளான்று வருகிறது. சிவபூஜை செய்து ஆதிசிவனை வழிபட்டு முக்தி பெறுவோம்

';

VIEW ALL

Read Next Story