சனிதோஷம் அகற்றும் சிவபெருமானின் வாகனம் நந்தி தேவருக்கு வழிபாடு! சனி பிரதோஷம் ஆவணி 1...

';

பிரதோஷம்

ஆவணி மாதம் முதல் நாளே பிரதோஷம் வருகிறது. சிவனுக்கும், சிவனின் வாகனரான நந்தி தேவரையும் வழிபடும் பிரதோஷ நாள் இன்று

';

நந்தி தேவர்

பிரதோஷ நாளன்று சிவனின் வாகனமாக திகழும் நந்தி தேவருக்கும் சிறப்பான நாள் இன்று. பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு வழிபாடுகள் செய்யப்படும்

';

சனி பிரதோஷம்

ஆவணி முதல் நாளன்று சனி பிரதோஷம் வருகிறது. இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் சனீஸ்வரரின் தோஷங்கள் ஏதேனும் இருந்தாலும் அதை நீக்கிவிடும்

';

சனீஸ்வரர்

நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனிக்கிழமைக்கு உரிய சனீஸ்வரர். சனி பிரதோஷத்தன்று சிவனுக்கு செய்யும் பூஜைகள் அனைத்தும் சனிதேவரையும் சாந்திப்படுத்தும்

';

சிவசக்தி வழிபாடு

இடப வாகனத்தில் உமையுடன் காட்சிதரும் சிவனை பிரதோஷ நேரத்தில் பூஜித்தால், அவர் கவலைகளை நீக்கி ரக்ஷித்திடுவார்

';

ஓம் நமசிவய

சிவன் அருள் பெறுவது மிகவும் சுலபமானது. ஓம் நமசிவய என்ற மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலே சிவனருள் சித்திக்கும்.

';

பக்தியுடன் வழிபாடு

உளபூர்வமாக சிவபெருமானை வணங்கினால், வாழ்வில் அனைத்து வளங்களும் உங்களுக்கு கிடைக்கும் இறை அருள் நிலைக்கும்

';

உபதேசம்

உலகத்தில் முக்தி அடைய விரும்புபவர்கள், பிரதோஷ நாளன்று நந்தியை வழிபட வேண்டும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. ஏனென்றால், சிவன் நேரடியாக நந்திக்கு முக்திக்கான மந்திரங்களை உபதேசித்தார் என்பது நம்பிக்கை

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story