புரட்டாசியில் சனிக்கிழமை படையலில் சிறப்பு! பெருமாளின் அருளைப் பெற அவருக்கு என்ன உணவு படைக்கலாம்?

Malathi Tamilselvan
Sep 14,2024
';

புரட்டாசி சனி

பெருமாளுக்கு உகந்தது சனிக்கிழமை என்றாலும் புரட்டாசி சனி மிகவும் விசேஷமானது. அது ஏன் தெரியுமா?

';

சனீஸ்வரர்

சூரியனின் மகன் சனி பிறந்தது சனிக்கிழமை நாளில் தான். சனி தோஷங்கள் நீங்க, புரட்டாசி சனியில் பெருமாளை வணங்குவது சிறப்பு

';

திருப்பதி

தென்னிந்தியாவில் புரட்டாசி சனி விரதம் கடைபிடிப்பது என்பது ஒரு பாரம்பரிய வழக்கமாகவே மாறிவிட்டது

';

வழிபாடு

சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருநந்தால், ஒரு நேரம் உணவு இருந்து நோன்பிருக்க வேண்டும்

';

திருப்பதி

திருமலையில் குடி கொண்டுள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானது

';

விரதம்

புரட்டாசி சனி விரதம் இருப்பவர்கள், மதியம் ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும், அதிலும் பெருமாளுக்கு பிடித்த உணவுகளை படையலிட வேண்டும்

';

புரட்டாசி சனிப் படையல்

சர்க்கரை பொங்கல், எள்ளு சாதம், புளி சாதம், தயிர் சாதம், வடை, கொண்டை கடலை சுண்டல், வாழைக்காய் பொரியல் ஆகியவற்றை இலையில் படையலிட வேண்டும்

';

மாவிளக்கு

புரட்டாசி சனிக்கிழமையில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது நலல்து. பச்சரிசியை இடித்து மாவாக்கிக் கொண்டு, அதில், வெல்லப்பாகு, ஏலக்காய், எள் கலந்து விளக்காக மாவை தயாரித்து, அதில் நெய் ஊற்றி திரிப்போட்டு விளக்கேற்றி திருவாராதனம் செய்ய வேண்டும்

';

அனுமன்

புரட்டாசி சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடும் சிறந்தது

';

அன்னதானம்

படையலிட்டு, பிறருக்கும் பகிர்ந்து உண்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story