லட்டு பிரசாதம் தொடர்பான சர்ச்சைகள் ஒருபுறம் என்றாலும், திருப்பதி என்றாலே அது ஒன்று தான் பிரசாதமா என்றால் இல்லை என்பதே பதில்
திருப்பதி திருமலையில் பெருமாள் மட்டுமே குடி கொண்டுள்ளார், தாயார் பத்மாவதி கீழ் திருப்பதியில் இருக்கிறார். இருந்தாலும் இரு கோவில்களிலும் உள்ள மடப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கான உணவுகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன
திருப்பதி சீனிவாசப்பெருமாளின் தாயார், மேல் திருப்பதி எனப்படும் திருமலை கோவிலின் மடப்பள்ளியை நிர்வகித்து வருகிறார் என்று சொல்வதுண்டு. மடப்பள்ளிக்கு அருகே வகுலாமாதாவுக்கு ஒரு சந்நிதியும் உண்டு
பெருமாளுக்கு தினசரி பல்வேறு சுவையான பட்சணங்களும் உணவுகளும் தயாரித்து நைவேத்தியம் செய்யப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது
நெய்யில் லட்சுமி அன்னை குடி கொண்டிருக்கிறாள் என்று சொல்வார்கள், ஆனால், திருப்பதி பிரசாதம் லட்டு பிரச்சனையில் நெய் தான் பிரச்சனையாக முளைத்திருக்கிறது
முன்பு திருப்பதிக்கு நெய் சப்ளை செய்துக் கொண்டிருந்த கர்நாடகாவின் நந்தினி நெய்யே, தற்போது மீண்டும் திருப்பதிக்கு வாங்கப்படுகிறது
லட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதான குற்றச்சாட்டின் பெயரில் திருப்பதி பிரசாதம் எதிர்மறையான கோணத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது
திருப்பதியில் லட்டு பிரசாதத்தைத் தவிர, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி என விதம்விதமான உணவுகளும் பலகாரங்களும் தயாரிக்கப்பட்டாலும், பெருமாளின் காலடிக்கு செல்லும் பாக்கியம் தயிர் சாதத்திற்கு மட்டும் தான் கிடைக்கும்...
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது