கடந்த வாரம் அதாவது ஆகஸ்ட் 14ம் தேதியன்று, புதன் சிம்ம ராசியில் வக்ர கதியில் இயங்கி வருகிறார். புதனின் இயக்கமும் அதன் தாக்கமும் 12 ராசிகளையும் பாதிக்கின்றன
புதன் செப்டம்பர் 09 வரை 25 நாட்கள் சிம்ம ராசியில் சஞ்சரித்த பிறகு, கன்னி ராசிக்கு செல்வார். சிம்மத்தில் வக்ரமாய் இயங்கும் புதன் வலிமையானவராக இருப்பார்
சிம்ம ராசியில் வக்ரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் புதன் ஆகஸ்ட் 28, 2024க்கு பிறகு, தனது இயக்கத்தை மாற்றி கடிகார சுற்றாக பயணிப்பார்
புதனின் அதிதேவதையான பெருமாளை வணங்கினால், புதன் கிரகம் நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும்
புதனின் சஞ்சாரத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க, குரு வழிபாடு அவசியம். புதனும் வியாழனும் இணைந்தால் கோடி நன்மைகள் வந்து சேரும்
நவகிரகங்கள் அனைத்திற்கும் நாயகர் சிவ பெருமான். சிவனை சிந்தையில் எக்கணமும் வைத்தால், பிரச்சனைகள் தூசாய் பறந்துபோகும்
2024 ஆம் ஆண்டில், புதன் கிரகம் பதினான்கு முறை பெயர்ச்சியாகி, சஞ்சார மாற்றம் செய்கிறார்.
14 முறை பெயர்ச்சியாகும் புதன் அதில் மூன்று முறை வக்ர கதிக்கு சென்று மீள்வார்
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது