புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமானது என்றால், அதிலும் இம்மாதம் புரட்டாசியின் வியாழக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாயந்தவை
பெருமாளுக்கு உகந்த மாதங்களில் முதன்மையானது புரட்டாசி. இந்த மாதத்தில் காக்கும் கடவுளை வணங்கினால் வல்வினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்
வியாழக்கிழமை குருவுக்கு மட்டுமல்ல, விஷ்ணு பகவானுக்கும் உரியது
புரட்டாசி மாத வழிபாட்டில் முக்கியமானது பெருமாளுக்கு நடத்தப்படும் தீர்த்தவாரி. தீர்த்தவாரியை பார்த்தால், பெருமாளை நீராட்டிய நீர் நம் மீது பட்டால் பாவங்கள் கரைந்தோடும்
பெருமாளுக்கு புரட்டாசியில் பிரம்மோத்சவம் கோலகலமாக கொண்டாடப்படுகிறது
எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும், அத்தனை அவதாரங்களிலும் பக்தர்களின் நலனை காக்கும் கடவுள் பெருமாள்
நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு, புரட்டாசி வியாழனில் பெருமாள் கோவில்களில் துலாபாரம் கொடுப்பது வழக்கம்
வியாழனன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் பாவங்கள் தொலைந்தோடும்
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது