IND vs NZ: பதக்கத்தை திருப்பி கொடுத்துருங்க ஜடேஜா...!

';

நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜடேஜா செய்த தவறு அவருடைய மனைவியை ஏமாற்றம் அடைய செய்தது.

';

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி பல தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

';

கடைசியாக உலக கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டு தான் நியூசிலாந்து அணியிடம் இந்தியா வெற்றி பெற்றது.

';

அதன் பிறகு பல போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இன்று வெற்றியை பெற வேண்டும் என ரோகித் சர்மா படை கடும் உத்வேகத்துடன் விளையாடி வருகிறது.

';

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே டக் அவுட் ஆகி வெளியேற வில் யங் 17 ரன்களிலும் முகமது சமியின் முதல் பந்திலேயும் பெவிலியன் திரும்பினார்.

';

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் செய்ய வந்தார்.

';

இவருடைய விக்கெட்டை தொடக்கத்திலேயே இந்தியா வீழ்த்தி இருந்தால் நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமான ஒரு முடிவு கிடைத்திருக்கும்.

';

ஆனால் ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருக்கும் போது சமி பந்து வீச்சில் கொடுத்த ஒரு அழகான கேச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா கோட்டை விட்டார்.

';

இதைப் பார்த்ததும் மைதானத்தில் இருந்த அவருடைய மனைவி ஷாக் ஆனார்.

';

பொதுவாக ஜடேஜா பில்டிங்கில் கில்லி போல் இருப்பவர். ஆனால் இன்று கையில் வந்த கேட்சை அவர் தவறவிட்டது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

';

நடப்பு உலக கோப்பையில் சிறப்பாக பில்டிங் செய்யும் வீரருக்கு தங்கப் பதக்கத்தை கொடுக்கும் ஒரு முயற்சி இந்திய அணி நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.

';

இந்த நிலையில் கடந்த போட்டியில் ஜடேஜா தங்கப் பதக்கத்தை வாங்கிய நிலையில் இன்று ஒரு எளிய கேட்சை அவர் தவறவிட்டார்.

';

இதனால் ரசிகர்கள் பலரும் ஜடேஜா நீங்கள் அந்த தங்கப் பதக்கத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

';

VIEW ALL

Read Next Story