தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து சேட்டேஷ்வர் புஜாரா சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சிக் கோப்பையில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் சேட்டேஷ்வர் புஜாரா இரட்டை சதம் அடித்துள்ளார்.
இந்தியாவில் முதல்தர கிரிக்கெட்டில் புஜாராவின் 18வது இரட்டை சதம் இது ஆகும்.
இதன் மூலம் முதல்தர போட்டியில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
டான் பிராட்மேன் (37), வாலி ஹம்மண்ட் (36), பாட்ஸி ஹெண்ட்ரென் (22) ஆகியோர் புஜாராவிற்கு முன்னாள் உள்ளனர்.
சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய புஜாரா 348 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக புஜாராவின் 25வது ரஞ்சி டிராபி சதம் இதுவாகும்.
234 ரன்கள் அடித்து இருந்த போது ஷஷாங்க் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.