விராட் vs ரோகித்: யாருக்கு அதிகம் சொத்து மதிப்பு?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு தகவல்கள் வெளியாகியிள்ளது.
அதில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு குறைவாக இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ரூ.1,550 சொத்துகளும், விராட் கோலி ரூ.1,510 கோடி சொத்துகளும் உள்ளது
ரோகித் சர்மா பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தம் ரூ.7 கோடி ஊதியமாக பெறுகிறார். ஒருநாள் போட்டிக்கும் ரூ.6 லட்சம் பெறுகிறார்.
ஒவ்வொரு டி20 போட்டிக்கும் ரூ.3 லட்சமும், ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சமும் ஊதியமாக பெற்று வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆண்டுக்கு ரூ.16 கோடி ஈட்டி வருகிறார்.
ஜியோ சினிமாஸ் என பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராக 5 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
அதேபோல் லாம்போர்கினி, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, டொயாடா, சுசூகி ஹாயாபூசா உள்ளிட்ட ரூ.6 முதல் 7 கோடி வரையிலான நட்சத்திர அந்தஸ்து கார்களை வைத்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் மும்பை நகரின் முக்கியப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பிலான 4 அறைகள் கொண்ட அபார்ட்மண்ட், ரூ.5.25 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றையும் ரோகித் சர்மா வாங்கி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ரேபிடோபாட்டிக்ஸ் நிறுவனம் வீரூட்ஸ் வெல்னஸ் சொல்யூஷன்ஸ் என்ற ஹெல்த்கேர் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறார். அண்மையில் கூட அமெரிக்காவில் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார் ரோகித் சர்மா.
இதன் மூலம் ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு ரூ.214 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை விடவும் 7.5 மடங்கு குறைவு