ஐபிஎல் 2024: ஏலத்தை நடத்தும் முதல் பெண் வர்ணனையாளர் யார்?

S.Karthikeyan
Dec 05,2023
';


ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தப்போவதாக தகவல்

';


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது.

';


கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளது

';


இந்த நிலையில் இம்முறை ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ள ஏலதாரரை மாற்ற ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

';


இதுவரை ஐபிஎல் ஏலத்தை ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மெடாஸ் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர்.

';


அதிலும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்காவை ஏலம் விட்டபோது எட்மெடாஸ் திடீரென மயங்கி விழுந்தார்.

';


இதையடுத்து உடனடியாக சாரு சர்மா ஏலத்தை நடத்தி கொடுத்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தினார்.

';


ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலதாரராக பெண் ஒருவரை ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

';


மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

';


இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தி வருகிறார். அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார்.

';


2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story