ஐபிஎல் 2025 : ஏலம் போகாத டாப் பிளேயர்கள்..!
ஐபிஎல் ஏலத்தில் இம்முறை ஸ்டார் பிளேயர்கள் சிலர் ஏலம் எடுக்கப்படவில்லை. இதில் இரண்டு பேர் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தற்காக ஆரஞ்சு கேப் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
:மயங்க் அகர்வால் 2011 முதல் பல ஐபிஎல் விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். ஆனால் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
பிரபல வீரர் கேன் வில்லியம்சன் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு ஐபிஎல்லில் நிறைய அனுபவம் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், வில்லியம்சன் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வென்றார். ஆனால் இம்முறை அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேவிட் வார்னர் இந்த ஏலத்தில் விற்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டில், அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இருப்பினும் அந்த அணி எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் விளையாடவில்லை. இதனால் அவரை இம்முறை எந்த ஐபிஎல் அணியும் ஏலம் எடுக்கவில்லை.
ஐபிஎல் வரலாற்றில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பியூஷ் சாவ்லா. மொத்தம் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசி இரண்டு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இந்த முறை மெகா ஏலத்தில் எந்த அணியும் இவரை ஏலம் எடுக்கவில்லை.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ ஐபிஎல் போட்டிகளில் 5 ஆண்டுகள் ஆடியுள்ளார். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் விளையாடததால் எந்த அணியும் அவரை வாங்கவில்லை