மும்பைக்கு அடுத்த ஹர்திக் பாண்டியா ரெடி..! அர்ஷின் யார்?

';

19 வயதுகுட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

';

இளம் வீரர் அர்ஷின் குல்கர்னியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றது

';

8 அணிகளுக்கு இடையிலான யு19 ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது.

';

இதன் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது.

';

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் உதய் சஹரின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

';

50 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 173 ரன்காளுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

';

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

';

பின்னர் அர்ஷின் குல்கர்னி - கேப்டன் சஹரன் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

';

சிறப்பாக ஆடிய அர்ஷின் குல்கர்னி 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முஷீர் கான் 48 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

';

ஆல்ரவுண்டராக ஜொலித்து இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச் சென்ற அர்ஷின் குல்கர்னி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அடுத்த ஹர்திக் பாண்டியா இவரோ? எனவும் பேச்சு எழுந்துள்ளது

';

VIEW ALL

Read Next Story