25 வருஷத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்?

';

கடந்த 25 ஆண்டுகளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

';

கடந்த 1998- ம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம் தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

';

இதையொட்டி இந்த 25 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை கூகுள் தெரிவித்துள்ளது.

';

இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இந்திய வீரர் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.

';

சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா என பிற இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை விராட் படைத்துள்ளார்.

';

2008-ம் ஆண்டு கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்த விராட், தொடர்ந்து கிரிக்கெட் உலகின் சாதனைகள் அனைத்தையும் மாற்றி எழுதி வருகிறார்.

';

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் என்ற சச்சினின் உலக சாதனையை முறியடித்தார்

';

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 50 சதங்கள் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.

';

அதோடு 11 போட்டிகளில் விளையாடி 765 ரன்கள் குவித்து, ஒரே தொடரில் தனி ஒரு வீரர் அடித்த அதிக ரன்கள் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

';

VIEW ALL

Read Next Story