புயலுக்கு மிக்ஜாம் என ஏன் பெயர் வைத்தார்கள்?

';


19ஆம் நூற்றாண்டில், வானிலை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் புயல்களுக்கு தன்னிச்சையாக பெயா் சூட்டி வந்தனர்.

';


அப்போது தங்களுக்கு பிடிக்காத பெண்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பெயர்களை சூட்டி வந்தாா்கள் என்று கூறப்படுகிறது.

';


புயல்களுக்குப் பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர் பிரிட்டனை சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் என்பவர் தான்.

';


இவர் முதலில் பிரிட்டனிலும், பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலை அளவீடுகளை கருவிகள் கொண்டு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வந்துள்ளார்.

';


முதலில் கிரேக்க எழுத்துக்களை கொண்ட பெயர்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் அவர் புயல்களுக்கு சூட்டி வந்ததாக கூறப்படுகிறது.

';


வானிலை குறித்த ஆய்வுகளுக்காக 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் உலக வானிலை மையம் (World Meteorological Organization).

';


இந்த மையத்தில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் உள்ள நாடுகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களுக்கு தான் புயலுக்கு பெயர் வைக்கும் அதிகாரம் உள்ளது.

';


இந்தியா வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் வருகிறது. இதன் தலைமையகம் இந்தியாவில் டெல்லியில் உள்ளது.

';


இந்த மண்டலத்தில் இருக்கும் 13 நாடுகளின் பரிந்துரைப்படி, உருவாகும் புயல்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

';


அரபிக்கடல், இந்திய பெருங்கடல், வங்கக்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு இந்த 13 நாடுகளால் பல பெயர்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

';


கடந்த முறை உருவான புயலுக்கு இந்தியா சார்பில் "தேஜ்" என பெயரிடப்பட்டு இருந்தது.

';


அதன் பிறகு உருவான இரண்டு புயல்களுக்கு மாலத்தீவு சார்பில் ‘மிதிலி’ எனவும், ஈரான் சார்பில் ‘ஹாமுன்’ எனவும் பெயர் வைக்கப்பட்டது.

';


அந்த வகையில் தற்போது தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு மியான்மர் நாட்டால் பரிந்துரைக்கபட்ட "மிக்ஜாம்" எனும் பெயர் வைக்கபட்டுள்ளது.

';


இதற்கு அந்நாட்டின் பர்மீஸ் மொழியில், "வலிமை மற்றும் எதிர்த்தெறிதல்" என பொருள் தருகிறது.

';


இதற்கு பின் வரும் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த ரெமல் என்ற பெயரும், அதன்பின் வரும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா எனும் பெயரும் தான் சூட்டப்படும்

';

VIEW ALL

Read Next Story