ஏர்டெல்: 90 நாட்கள் வேலிடிட்டியில் சூப்பர் பிளான்..!
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் இப்போது 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது.
பெரும்பாலான இந்திய பயனர்கள் 28, 56 மற்றும் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் ரீச்சார்ஜ் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
எனவே, 90 நாட்கள் வேலிடிட்டியாகும் திட்டம் பயனர்களுக்கு சற்று வித்தியாசமாகத் தெரிகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 779 ரூபாயில் வருகிறது பலன்களைப் பார்ப்போம்.
தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாயிஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 SMS உண்டு.
மேலும், Apollo 24|7 Circle, இலவச HelloTunes, Wynk Music மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா உபயோகிக்கலாம்.