கார் வாங்குவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், அதனை பராமரிப்பது முக்கியம். இல்லை என்றால் நீண்ட நாட்கள் இயங்காது.
இன்ஜின் ஆயில், டயர், பிரேக் ஆகியவற்றை அடிக்கடி பராமரித்து சரி செய்ய வேண்டும்.
காருக்கும் எப்போதும் உயர்தர ஆயிலை பயன்படுத்துங்கள். சர்வீஸ் சென்டர் மூலம் பாகங்களை மாற்றுங்கள்.
காரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் துருப்பிடிக்காமல் இருக்கும்.
வேகமாக ஓட்டுதல், திடீரென பிரேக் பிடிப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும், இது காரின் இஞ்சினை மோசமாக்கும்.
காரை முடிந்தவரை கேரேஜில் நிறுத்தவும். வெயில் அல்லது மழையில் நிறுத்துவதை தவிர்ப்பது நல்லது.
தேய்மானத்தை குறைக்கவும், மைலேஜை மேம்படுத்தவும், உங்கள் டயர்களை சரியாக உயர்த்தி சீரமைக்கவும்.