பிரிட்ஜ் கூலிங் பிரச்சனையா? 10 தவறுகளை கவனியுங்கள்

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

1. பிரிட்ஜ் கதவில் இருக்கும் காஸ்கெட்டை கொஞ்சம் கவனியுங்கள். டோர் காஸ்கெட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது ஓட்டைகள் இருந்தால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் நிலையாக இருக்காது. இதனால் மின்சாரமும் அதிகம் செலவாகும்

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

2. பிரிட்ஜ் டோர்களை சரியாக மூடவும். சில நேரங்களில் பிரிட்ஜ்ஜின் கதவை சரியாக மூடாமல் விட்டுவிடுவீர்கள். இப்படி செய்தால், உங்கள் பிரிட்ஜ் திறந்திருக்கும் நேரத்தில் குளிர்ச்சியை உருவாக்க அதிகமாக செயல்படும்.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

3. உங்கள் பிரிட்ஜ்ஜில் சரியான டெம்ப்பிரேச்சரை செட் செய்வது முக்கியம். பிரிட்ஜ் இன் டெம்ப்பிரேச்சர் 4°C ஆகவும், பிரீசர் டெம்ப்பிரேச்சர் 0°C அல்லது -18°C -க்குள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

4. பிரிட்ஜ்ஜில் அதிகமான பொருட்களை திணிக்க கூடாது. அதாவது பிரிட்ஜ்ஜின் இன்டிரியர் வென்ட்கள் எளிதாக கூலிங் காற்றை அனுப்பும் படி, பொருட்களை அடுக்க வேண்டும். இடைவெளியே இல்லாமல், அடைசல் போல பொருட்களை பிரிட்ஜ்ஜினுள் திணிக்க கூடாது.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

5. பிரிட்ஜ்ஜில் வைக்கும் போர்டுகளை சரியாக பேக்கிங் உடன் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பாலிஸ்டிக் கண்டைனர் அல்லது மூடப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது சிறப்பானது.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

6. டிபிரோஸ்ட்டிங் செய்யும் பழக்கத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். உங்கள் பிரிட்ஜ்ஜின் பிரீஸரில் படியும் ஐஸ்களை உடனுக்குடன் நீக்கம் செய்வது முக்கியமானது. அதிகப்படியான ஐஸ் பிரீஸரில் இருந்தால் பிரிட்ஜ் சீக்கிரம் கூலிங் ஆகும் என்பது போலியான தகவலாகும். பிரீஸரில் படியும் ஐஸ் பிரிட்ஜ்ஜை வீணடிக்கும், மின்சார செலவை அதிகரிக்கும்.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

7. உங்கள் பிரிட்ஜ் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி குறைந்தது 2 இன்ச் இடைவெளியாவது இருக்க வேண்டும். குறிப்பாக, சுவருக்கு அருகில் பிரிட்ஜ்ஜை வைக்கும் போது, இதை நோட் செய்வது மிகவும் முக்கியமானது.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

8. உங்கள் பிரிட்ஜ்ஜை அடிக்கடி சுத்தம் செய்வது மிக முக்கியமானது. பிரிட்ஜ்ஜை சுத்தமாக வைக்காவிட்டால், நாளைடைவில் அழுக்குகள் பிரிட்ஜ்ஜின் வெண்ட்களை ஆங்காங்கே அடைத்துவிடும். இதனால் கூலிங் சிக்கல் எழக்கூடும்.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

9. பிரிட்ஜ்ஜின் கன்டென்சர் காயில்-களை சுத்தமாக வைப்பதும் முக்கியமானது. கன்டென்சர் காயிலில் தூசிகள் மற்றும் அழுக்குகள் பாடியதுவங்கினால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் வருடங்கள் நகர-நகர குறைவாக அதிக வாய்ப்புள்ளது.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

10. பிரிட்ஜ் நேரான தரையில், எந்தவித ஏற்ற இரங்கங்கள் இல்லாமல் நிலையாய் அமைந்திருக்கிறதா என்பதை சோதனை செய்துகொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜ் மெக்கானிக்கை வைத்து பிரிட்ஜ்ஜை முழுமையாக செக் அப் செய்வது சிறப்பானது.

Published by: Karthikeyan Sekar | Oct 12, 2023

VIEW ALL

Read Next Story