பெட்ரோல், டீசல் டோர் டெலவரி.! வாங்குவது எப்படி?

';

ஆன்லைனில் உணவுகள் ஆர்டர் செய்வது போல் இப்போது பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி செய்யப்படுகின்றன.

';

இந்தியாவில் டோர் டு டோர் பெட்ரோல் டீசல் டெலிவரி சந்தை வளர்ந்து வருகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே இந்த சேவையை வழங்குகின்றன.

';

மேலும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்தத் துறையில் நுழையத் தொடங்கி உள்ளன. டோர் டு டோர் எரிபொருள் டெலிவரி வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

';

இந்த சேவையின் விலை பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும் விலையை விட சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

';

டோர் டு டோர் எரிபொருள் டெலிவரி சேவை இந்தியாவில் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

டோர் டு டோர் எரிபொருள் டெலிவரி சேவையைப் பெறுவதற்கு, நீங்கள் முதலில் ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இருப்பிடம், தேவையான எரிபொருள், விலையை உறுதிப்படுத்த வேண்டும்.

';

ஆப் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அருகிலுள்ள டெலிவரி வாகனத்தை அனுப்பும். டெலிவரி வாகனம் உங்கள் வீட்டிற்கு வந்து எரிபொருளை வழங்கும்.

';

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் Fuel@Call மூலம் தொழில் மற்றும் கமர்ஷியல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் டெலிவரி செய்கிறது.

';

ஸ்டார்ட்அப் கம்பெனிகளான FuelBuddy, Hamsafar, PepFuels, Repos Energy ஆகியவை இப்போது இந்தியாவில் தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் டெலிவரி செய்கின்றன.

';

இந்த சேவை தற்போது இந்தியாவில் பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story