கூகுள்

கூகுள் (Google) உங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை சேகரிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கூகுள் உங்கள் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதால், தான் நீங்கள் என்ன செய்தாலும் அது தொடர்பான விளம்பரங்கள் போனில் தோன்றும்.

';

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம் என்றாலும் அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும்.

';

பிரைவசி விதி மீறல்

எனினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக சில பயனர்கள் லொகேஷனை ஆஃப் செய்திருப்பார்கள். இப்படி லொகேஷன் அக்சஸை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சேகரிக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது.

';

அமெரிக்காவில் வழக்கு

இந்நிலையில், லொகேஷனை ஆஃப் செய்த பயனர்களின் இருப்பிட விவரம் சார்ந்த தரவுகளை கூகுள் சேகரித்ததாக சொல்லி அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

';

லொகேஷன் தரவுகள்

கூகுளின் வெப் சேவையை பயனர்கள் பயன்படுத்தும் போது அதன் மூலம் லொகேஷன் தொடர்பான தரவுகள் மாற்று வழியில் பயனர்களுக்கு தெரியாமல் சேகரிக்கப்பட்டதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது

';

அபராதம்

கூகுள் நிறுவனம் தரவுகளை சேகரித்தது உறுதி செய்யப்பட்ட காரணத்தால் கூகுளுக்கு 93 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,000 கோடி.

';

கூகுள் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இந்த அபராதத்தை செலுத்த கூகுள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

';

கூகுள் போன்

உலக அளவில் கூகுளின் ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story