வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாக மாறிவிட்ட நிலையில், அதில் ஸ்டேட்டஸ் போடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்பது, நமது அப்போதைய மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது
நாம் யாருடனும் தொடர்பு கொள்ளாமலேயே நமது நிலையை அவ்வப்போது மாற்றுவதன் மூலம், நமது தற்போதைய நிலையை பிறர் தெரிந்துக் கொள்ள முடியும்
நம்முடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் என்ன வைத்திருக்கிறோம் என்பதை பிறர் பார்த்தால், அது நமக்கு தெரிந்துவிடும்
யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை வாட்ஸ்அப் காட்டிவிடும் என்பதால் பலர் ஸ்டேட்டஸை பார்ப்பதில் சங்கோஜப்படுகிறார்கள்
நாம் ஒருவருடைய ஸ்டேட்டஸைப் பார்த்தால் அது அவருக்கு தெரியாமல் இருக்க செட்டிங்க்ஸ் பகுதியில் சிறிய மாற்றம் செய்தால் போதும்
Whatsapp Read Receipt Feature என்ற அம்சத்தை செட்டிங்க்ஸில் மாற்றினால், ஸ்டேட்டஸை நீங்கள் பார்த்தது அவருக்குத் தெரியாது
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது