இன்ஸ்டாகிராம்: ரீல்ஸ் ஹிட் அடிக்க வேண்டுமா?
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஹிட் அடிக்க வேண்டும் என்றால் அதற்கான சில அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. அதனை சரிசெய்தால் உங்களின் ரீல்ஸ் ஹிட் அடிக்கும்.
என்ன நோக்கத்துக்காக உருவாக்குகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். எஃபெக்ட்ஸ், இசை அல்லது வாய்ஸ் போன்ற அம்சங்களைக் கவனியுங்கள்.
நீங்கள் சொல்ல விரும்பும் கதை, வாடிகையாளர்களை கவரும் வகையில் இருப்பதை முன்கூட்டியே வடிவமைத்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர்களின் உணர்ச்சிகளை வசப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
இப்போது என்ன டிரெண்டிங் இருக்கிறது என கவனித்து அதற்கேற்ப உங்களின் ரீல்ஸ்களை உருவாக்குங்கள்
உங்கள் ரீல்ஸ் எப்போதும் தனித்துவமாக இருக்க வேண்டும். என்ன கருப்பொருளாக இருந்தாலும் எளிமையாகவும், வித்தியாசமாகவும் சொல்ல வேண்டும்.
உங்கள் ரீல்ஸ் பார்வையாளர்களை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏற்ப உங்களின் ஸ்டோரி இருப்பது அவசியம்.
தொடர்ச்சியாக ரீல்ஸ் நீங்கள் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் உங்களின் ரீல்ஸ் லைம்லைட்டில் இருக்கும்.