2023-ல் கூகுளில் செக்ஸ் பற்றி அதிகம் தேடப்பட்ட கேள்விகள்
கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதில் செக்ஸ் தொடர்பான சந்தேகங்களையே நெட்டிசன்கள் கூகுகிளில் அதிகம் தேடி இருக்கின்றனர்.
உங்களுக்கு மிகப் பிடித்தமான செக்ஸ் பொசிஷன் எது? What is the speed bump position? என்ற கேள்வியை கூகுளில் அதிகமான மக்கள் தேடியுள்ளனர்.
அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானதா? என்ற கேள்விதான் பாலியல் சார்ந்து அதிகப்படியாக கேட்கப்பட்டுள்ள இரண்டாவது கேள்வி ஆகும்.
மூன்றாவதாக, பாலியல் உறவு வைத்துக் கொண்ட பிறகு ரத்தக்கசிவு எதனால் ஏற்படுகிறது? என்று தேடியுள்ளனர்.
உடலுறவுக்குப் பிறகு சரும எரிச்சல் அல்லது பெண்ணுறுப்பு வறட்சி போன்றவை ஏற்படுவது ஏன் என தேடியுள்ளனர்.
அடுத்ததாக, பாலியல் உறவுக்கு முன்பாக எத்தனை முறை டேட்டிங் செல்லலாம்?
பாலியல் உறவின்போது எவ்வளவு கலோரிகள் குறையும்?, கருச்சிதைவு நடந்த பின்னால் எவ்வளவு காலம் கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாம்?
ஆசனவழி புணர்ச்சி என்றால் என்ன?, மீன் எப்படி தாம்பத்ய உறவு கொள்ளும்? என நெட்டிசன்கள் தேடியுள்ளனர்.
பெண்களை பொறுத்தவரை, எனக்கு ஏன் பாலியல் வேட்கையே இல்லை? என அதிகம் தேடியிருக்கிறார்கள்.