பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, மின்சாரம் என எந்தவகைக் காராக இருந்தாலும், சிக்னலில் காத்திருக்கும்போது செலவு செய்யும் எரிபொருள் எவ்வளவு என்பது பல காரணிகளைப் பொறுத்தது:
எந்த வாகனம் என்பதைப் பொறுத்தும் எரிபொருள் நுகர்வு மாறுபடும். அதேபோல வெவ்வேறு வாகனங்கள் வெவ்வேறு எஞ்சினைக் கொண்டுள்ளன, இதன் காரணமாக எரிபொருள் நுகர்வு வேறுபாடும்
இலகுரக வாகனங்களை விட கனரக வாகனங்கள் அதிக எரிபொருளைப் பயன்படுத்துகின்றன
ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதும் எரிபொருள் உபயோகத்தை அதிகரிக்கிறது.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், வாகனம் அடிக்கடி நின்று செல்ல வேண்டும், இது எரிபொருள் செலவை அதிகரிக்கிறது
குளிர்வான இயந்திரத்தை விட சூடான இயந்திரம் சற்று குறைவான பெட்ரோலைப் பயன்படுத்துகிறது.
வாகனத்தை தவறாமல் சர்வீஸ் செய்வது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும். வழக்கமான சர்வீஸ் உங்கள் வாகனத்தின் எஞ்சினை திறமையாக வேலை செய்ய வைத்து, எரிபொருள் உபயோகத்தை குறைக்கும்.
போக்குவரத்து சிக்னலில் ஒரு நிமிடத்திற்கு மேல் காத்திருக்க நேர்ந்தால், வாகனத்தை நிறுத்துங்கள். இதனால் எரிபொருள் மிச்சமாகும்
எரிபொருளை வீணாக்கமல் இருப்பதும், குறைந்தபட்ச பயன்பாடும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற உதவுகிறது.