ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப் போன நிலையில், அது சரியாக செயல்படவில்லை என்றால், நமது பணிகள் பல பாதிக்கப்படும்.
ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி ஹேங் ஆகாமல் இருக்கவும், துரிதமாக செயல்படவும் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
உங்கள் போனில் உள்ள தேவையில்லாத செயல்களை நீக்குவதால், ஃபோன் துரிதமாக வேலை செய்யும்.
உங்கள் போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் பிற பைல்களை, அவ்வப்போது ஏதேனும் ஹார்ட் டிஸ்க்களில் சேமித்துக் கொண்டு, நீக்கி விட்டால் சேமிப்பகம் ஏற்படும்.
போட்டோக்களை விட வீடியோக்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால், அதனை அவ்வப்போது நீக்கி விடுவது நல்லது.
பேங்க் கிரவுண்டில் இயங்கும் செயலிகளை மூடுவதால், போனின் ஸ்பீடு அதிகரிக்கும்.
உங்கள் போனின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேரை அவ்வப்போது புதுப்பிப்பது, போன் வேகமாக இயங்க பெரிதும் உதவும்.
லைவ் வால்பேப்பர், பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அது போனில் உள்ள பிராசஸரீஸ் செயல் திறனை குறைக்கிறது.