ரூ.15 லட்சத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதமான டாப் 5 கார்கள்..!

';

எந்தவொரு புதிய காரை வாங்குவதற்கு முன்பும், எது அதிக பாதுகாப்பை தருகிறது என்பதில்தான் மக்கள் கவனம் செலுத்துவார்கள்.

';

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்களில் முன்பக்க சக்கரங்களில் மட்டுமே டிஸ்க் பிரேக் இருந்தாலும், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ள சில கார்களும் உள்ளன.

';

நான்கு டிஸ்க் பிரேக் உள்ள கார்கள் அதிக பாதுகாப்பை தருவதாக உள்ளன. இந்த வசதி உள்ள கார்களில் எவ்வுளவு வேகமாக சென்றாலும் பிரேக் பிடித்தால் உடனே நின்றுவிடும். அதுமட்டுமின்றி டிஸ்க் பிரேக்குகளை பராமரிப்பதும் எளிது.

';

நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்ட, ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையிலுள்ள கார்களின் பட்டியலையே இப்போது பார்க்கலாம்.

';

ஹூண்டாய் i20 N லைன்

i20 ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரில் பெர்ஃபார்மன்ஸை மையப்படுத்தி ஸ்போர்டிவ் தோற்றத்தோடு வந்திருக்கும் கார்தான் ஹூண்டாய் i20 N லைன். இக்காரில் உள்ள நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.46 லட்சம் வரையில் கிடைக்கிறது.

';

ஹூண்டாய் கிரெட்டா

இந்தியாவின் மிகவும் பிரபலமான SUV கார்களில் ஒன்றாக கிரெட்டா இருக்கிறது. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் ஆரம்ப விலை ரூ.10.87 லட்சமாகும்.

';

மாருதி சுசூகி கிராண்ட் விடாரா

மாருதியின் நெக்ஸா வரிசையில் உள்ள ப்ரீமியம் ரக SUV கார்தான் கிராண்ட் விடாரா. இதன் நான்கு சக்கரங்களிலும் பொறுத்தப்பட்டுள்ள டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இக்காரின் ஆரம்ப விலை ரூ.10.70 லட்சமாகும்.

';

எம்ஜி ஆஸ்டார்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்களிடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது எம்ஜி கார்கள். நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.15 லட்சமாகும். டிஸ்க் பிரேக் இல்லாத காரின் ஆரம்ப விலை ரூ.10.81 லட்சமாகும்.

';

கியா செல்டாஸ்

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த கியா நிறுவனம், முதன் முதலில் இந்தியாவில் செல்டாஸ் காரையே அறிமுகப்படுத்தியது. இந்தக் காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இக்காரின் ஆரம்ப விலை ரூ.10.90 லட்சமாகும்.

';

VIEW ALL

Read Next Story