கிரிக்கெட் ஸ்கோர் காட்டும் ஸ்கூட்டர்

S.Karthikeyan
Oct 21,2023
';


டிவிஎஸ் நிறுவனம் ஜுபிடர் 125 ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய புதிய ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

';


இந்நிறுவனத்தின் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கிறது.

';


இந்நிலையில் இன்று டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் தற்போது ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்கிறது.

';


இந்த வசதி கொண்ட இந்த செக்மெண்டிலேயே முதல் வாகனமாக இந்த ஜூபிடர் 125 ஸ்கூட்டர் தான் இருக்கிறது.

';


இந்த ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இந்த செக்மென்டிலேயே புதிய மைல்கல்லை உருவாக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கிறது.

';


இதில் ரைடர்கள் தங்கள் ஸ்மார்ட் போனை கனெக்ட் செய்து டிவிஎஸ் கனெக்ட் மொபைல் அப்ளிகேஷன் மூலம் செல்போனையும் ஸ்கூட்டரையும் இணைத்துக் கொள்ள முடியும்.

';


இதன் மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட், கால் மற்றும் எஸ்எம்எஸ் நோட்டிபிகேஷன், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ரியல் டைம் ஸ்போர்ட்ஸ் கோர்ஸ், சோசியல் மீடியா தளங்களில் இருந்து வரும் அப்டேட்களை பெற முடியும்.

';


இதுபோக இந்த ஸ்கூட்டரில் ஃபாலோமி ஹெட்லைட் அம்சம் இருக்கிறது . அதன்படி நீங்க ஸ்கூட்டர் இன்ஜினை ஆப் செய்து விட்டாலும் அடுத்த 20 நொடிகள் ஹெட் லைட் ஆஃப் ஆகாமல் இருக்கும்.

';


இந்த ஸ்கூட்டரின் இன்ஜினை பொறுத்தவரை 124.8சிசி சிங்கிள் சிலிண்டர், 2 வால்வு, ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

';


இது 8 பிஎச்பி பவரை 6500 ஆர்பிஎம்மிலும் 10.5 என்எம் டார்க் திறனை 4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

';


இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் ரூபாய் 96,855 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகமாகி உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் இந்த பைக்கை நாம் புக் செய்து பெற முடியும்.

';

VIEW ALL

Read Next Story