பலருக்கும் தெரியாத G board கீபோர்டு டிரிக்ஸ்! இனி இப்படி கூட மெசேஜ் அனுப்பலாம்!!

S.Karthikeyan
Oct 26,2023
';


பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஜிபோர்டு விசைப்பலகையில், பலவிதமான அம்சங்கள் உள்ளன. அவற்றில் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் மூன்று அம்சங்களை இங்குக் காணலாம்.

';


பொதுவாக டெலிகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் மெசேஜ் செய்வதற்கு ஜி போர்டினை பயன்படுத்துகிறோம். இந்த ஜிபோர்டு கீபோர்டில் பலருக்கும் தெரியாத பல நுணுக்கங்கள் உள்ளன.

';


இந்த அம்சங்களை பயன்படுத்த நீங்கள் எந்த விதமான ஆப்களையும் பதிவிறக்கத் தேவையில்லை. இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் போதும்.

';


உங்கள் நண்பர்களுக்கோ அல்லது விருப்பமானவர்களுக்கோ மெசேஜ் செய்யும்போது அதிகமான எழுத்துக்களை டைப் செய்து விட்டு, ஒவ்வொன்றாக அதனை டெலீட் செய்வதில் சிரமமாக உள்ளதா?

';


உங்கள் கீ போர்டில் மெசேஜை டைப் செய்த பிறகு அதை டெலீட் செய்ய பேக்ஸ்பேஸ் (Backspace) பட்டனை பிரஸ் செய்து விட்டு அதனை இடதுபுறம் ஸ்வைப் செய்தாலே போதும். அனைத்து மெசேஜும் நொடியில் டெலிட் ஆகி விடும்.

';


உங்கள் கூகுள் போர்டில் மெசேஜை டைப் செய்த பிறகு ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை சரி செய்வதற்கு எந்த இடத்தில் தவறு உள்ளதோ அந்த இடத்திற்கு கர்சரை கொண்டு செல்வோம். அவ்வாறு கர்சரை கொண்டு செல்வதற்கு சிரமாக இருக்கும்.

';


இதற்கு ஸ்பேஸ்பாரை இடதுபுறம் அல்லது வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும் நீங்கள் நினைக்கும் இடத்தில் கர்சரை பொருத்தி விடமுடியும். இதனால் சுலபமான முறையில் நீங்கள் தவறாக டைப் செய்த மெசேஜினை சரி செய்து கொள்ளலாம். இதில் நேரத்தை வீணடிக்க தேவையில்லை.

';


ஒரு டெக்ஸ்டில் குறிப்பிட்ட ஒரு எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக (Capital letter)மாற்ற வேண்டும். இதற்கு நீங்கள் கேப்ஸ்லாக்கை (Caps Lock) ஆன் செய்து பிறகு டைப் செய்வது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் உங்கள் வேலை சுலபமாகி விடும்.

';


இதற்கு நீங்கள் உங்கள் கூகுள் போர்டில் கேப்ஸ்லாக் ஆரோவை தொட்டு பிடித்தவாறு, அப்படியே அதனை ஸ்வைப் செய்து எந்த எழுத்தினை பெரிதாக்க (Capital letter) விரும்புகிறீர்களோ அதில் வைத்துவிட்டால் போதும்.

';


நீங்கள் வைத்த எழுத்து தானாகவே பெரிய எழுத்தாக (Capital letter) மாறிவிடும். இந்த அட்டகாசமான ட்ரிக்கை பயன்படுத்தி உங்கள் விரைவாக மெசேஜ் அனுப்பலாம்.

';

VIEW ALL

Read Next Story