வாய்ஸ் நோட்ஸ், ஸ்டிக்கர் பகிரலாம்; எப்படி?
வாட்ஸ்அப் அண்மையில் வாட்ஸ்அப் சேனல் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராம் போலவே இதில் உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களைப் பின்தொடரலாம்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.
பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ்அப் சேனல் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது.
அதில் தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களைப் பின்தொடரலாம்.
கிரிக்கெட் பிரபலங்கள், ஐ.பி.எல் அணிகள், திரை பிரபலங்கள் எனப் பலர் இதில் இணைந்துள்ளனர்.
இது one-way broadcast டூல் ஆகும். இதில் அவர்களுக்கு ரிப்ளை செய்ய முடியாது. இந்நிலையில் வாட்ஸ்அப் சேனல் வசதியில் வாய்ஸ் நோட்ஸ், ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படஉள்ளது.
WABetaInfo இன் படி, தற்போது இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ப்ர்சினல் ஷேட் போலவே வாய்ஸ் நோட்ஸ், ஸ்டிக்கர் அனுப்பும் படி அறிமுகம் செய்யப்படுகிறது.
விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
ஆண்ட்ராய்டு 2.23.23.2க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் தற்போது இந்த அம்சம் சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டு பேசலாம். பிரபலங்கள் அதிக பாலோவர்களைப் பெற முடியும்.
வாட்ஸ்அப் சேனல் மிகவும் தனிப்பட்ட அம்சமாகும்.
இதன் மூலம் உங்கள் profile photo அல்லது தொலைப் பேசி எண் எனவும் பொது வெளியில் காண்பிக்கப்படாது.