வாட்ஸ்அப்பில் வந்த யூடியூப் ப்யூச்சர்..!
வாட்ஸ்அப் வழியாக ஒரு வீடியோ பார்க்கும் போது, அதை பின்னோக்கி நகர்த்தவும் அல்லது முன்னோக்கி செல்லவும், வீடியோவின்கீழ் அணுக கிடைக்கும் ப்ராக்ரெஸ் பார்-ஐ (Progress Bar) தானே பயன்படுத்துவோம்.
இனிமேல் அந்த ப்ராக்ரெஸ் பாருக்கு வேலை இருக்காது. ஏனென்றால் வாட்ஸ்அப்பில் வீடியோக்களை ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு (Rewind and Forward) செய்ய உதவும் அம்சம் கூடிய விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது வரையிலாக சோதனை கட்டத்தில் (Testing Stage) உள்ள இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.23.24.6-க்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Android 2.23.24.6 WhatsApp Beta Version) அணுக கிடைக்கிறது.
வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய வீடியோ பிளேபேக் கண்ட்ரோல்கள் (Video Playback Controls), வீடியோக்களின் மிக முக்கியமான பகுதிகளை விரைவாக மற்றும் எளிமையாக சென்றடைய உதவும்
இந்த புதிய வீடியோ பிளேபேக் கண்ட்ரோல்கள் ஆனது வாட்ஸ்அப்பில் உள்ள வீடியோக்களை 10 வினாடிகளுக்கு (10 Seconds) ரிவைண்ட் செய்யவும், ஃபார்வர்டு செய்யவும் அனுமதிக்கும்.
அதாவது (முன்னரே குறிப்பிட்டபடி) யூட்யூப் வீடியோக்களில் (YouTube Videos) உள்ள ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு கண்ட்ரோல்களை போலவேத்தான் இதுவும் செயல்படும்.
அறியாதோர்களுக்கு யூட்யூப் வீடியோக்களின் இடது புறம் மற்றும் வலது புறத்தில் டபுள் டாப் (Double Tap) செய்வதன் மூலம் அவைகளை ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு செய்யலாம்.
தற்போது வரை இந்த அம்சம் பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது. அதாவது இது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது.