குருத்தெலும்பு

எலும்புகளின் முனைகளை குஷன் போல பாதுகாக்கும் குருத்தெலும்பு காலப்போக்கில் தேய்ந்து போகும்போது கீல்வாதம் ஏற்படுகிறது.

';

மூட்டு சேதம்

கீல்வாதம் எந்த மூட்டுக்கும் சேதம் விளைவிக்கும் என்றாலும், பொதுவாக உங்கள் கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் முதுகெலும்புகளில் உள்ள மூட்டுகளை பாதிக்கிறது.

';

கீல்வாதம்

கீல்வாதம் பெரும்பாலும் 55+ வயதினருக்கு ஏற்படுகிறது. அதிலும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முழங்கால் மூட்டுவலி அதிகமாக ஏற்படுகிறது.

';

உடல் எடை

கீல்வாதத்தில் மூட்டுகளுக்கு ஏற்படும் சேதத்தை மாற்ற முடியாது என்றாலும், சுறுசுறுப்பாக இருப்பது, உடல் எடையை பராமரிப்பது மூட்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

';


வலி, வீக்கம், விறைப்பு மற்றும் சில சமயங்களில், மூட்டு இறுகுதல் அல்லது உடைதல் போன்ற உணர்வு ஆகியவை கீல்வாத அறிகுறிகள்

';

உடற்பயிற்சி

ஒரு நாளில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், விறைப்பைப் போக்கவும் உதவும்.

';

தசை வலி

கீல்வாதத்தில் தசை வலி மற்றும் விறைப்புத் தன்மையைப் போக்க அவ்வப்போது உங்கள் உடலின் தன்மைக்கு ஏற்ப சூடு மற்றும் குளிர் ஒத்தடம் கொடுக்கவும்.

';

பிளாவனாய்டுகள்

பிளாவனாய்டுகள் அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதால், வீக்கம் குறைவதுடன் கீல்வாத அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

';

வைட்டமின்

வைட்டமின் சி, வைட்டமின் டி, பீட்டா கரோட்டின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ள உணவுகளை உண்பதும் நன்மை தரும்.

';

அறுவை சிகிச்சை

கீல்வாத சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றால் ஆர்த்ரோஸ்கோபி, மூட்டு மாற்று, ஆஸ்டியோடோமி அல்லது மூட்டு இணைவு போன்ற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

';

VIEW ALL

Read Next Story