நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்

Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2024, 04:53 PM IST
  • 42 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அமேதிக்கு வந்தேன்.
  • இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.
  • அக்னிவீர் யோஜனா திட்டத்தை நிறுத்துவோம்: ராகுல் காந்தி
நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம் title=

Lok Sabha Elections: வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ள ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் அமேதி, ரேபரேலி உட்பட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் பல முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார். 

‘42 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக அமேதிக்கு வந்தேன். நான் 12 வயது குழந்தையாக இருந்தபோது, ​​எனது தந்தையுடன் வந்தேன். அரசியலில் நான் கற்றுக்கொண்டவை எல்லாம் அமேதி மக்கள் எனக்கு கற்றுக் கொடுத்தவை. முதன்முறையாக வந்தபோது இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை’ என்றார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "எனது தந்தைக்கும் அமேதிக்கும் இடையே உள்ள அன்பான உறவை நான் என் கண்களால் பார்த்துள்ளேன். என் அரசியலும் என் தந்தையின் அரசியல் போன்றதுதான். நான் அமேதியின் அங்கமாக இருந்தேன், அமேதியின் அங்கமாக உள்ளேன், அமேதியின் அங்கமாக இருப்பேன்’ என்று கூறினார். தனது பேச்சில் ​​பாஜகவைத் தாக்கிய ராகுல் காந்தி, இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் தேர்தல் என்றும் தான் அமேதி மக்களின் குரலாகவும் சிந்தனையாகவும் உள்ளதாகவும் கூறினார். 

நாட்டில் 20-22 பேர் பணக்காரர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்: ராகுல் காந்தி

“சமீபத்தில் மோடி ஊடகவியலாளர்களுக்கு பல பேட்டிகளை அளித்து வருகிறார். பேட்டி எடுப்பவர்கள் நரேந்திர மோடியினுடையவர்கள், எங்களுக்கானவர்கள் அல்ல. அவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் பற்றி பேசுவதில்லை. இந்தியாவில் பணக்காரர்கள் பெருகுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கு ஆணவமாக பதிலளிக்கிறார். நாட்டில் உள்ள ஒரு சில 22-25 பேர் மட்டும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்றும் ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்றும் மோடி விரும்புகிறார்’ என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும் படிக்க | மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

உணவு பூங்கா மற்றும் டிரிபிள் ஐடியை மோடி பறித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை காங்கிரஸ் அனைத்து மூலைகளிலும் பரப்பியதாக கூறிய அவர் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இங்கு உணவு பூங்கா அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அக்னிவீர் யோஜனா திட்டத்தை நிறுத்துவோம்: ராகுல் காந்தி

பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ஆட்சி அமைந்தவுடன், அக்னிவீர் திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று கூறினார். தியாகிகள் அனைவரும் ஒரே வகையில் இருப்பார்கள், அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும், அனைவருக்கும் மரியாதை கிடைக்கும், அனைவருக்கும் பதக்கம் கிடைக்கும் என்றார் அவர். அதானிக்கு உதவ ராணுவத்தை வற்புறுத்தி மோடி போட்ட திட்டம் தான் அக்னிவீர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அமேதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களை மோடி வேலையில்லாமல் ஆக்கினார் என்றும் மோடியை சாடினார் ராகுல்.

அமேதிக்காக தனது வாழ்வையே தியாகம் செய்தவர் கே.எல்.சர்மா

அமேதி வேட்பாளர் கே.எல்.சர்மாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர் அமேதி மக்களுக்காக 40 ஆண்டுகளாக உழைத்து வருவதாக தெரிவித்தார். ‘இவருடன் இணைந்து எனது தந்தை 150 ஒருங்கிணைப்பாளர்களை உருவாக்கினார். கிஷோரி ஜி அமேதியில் பணியாற்றினார், உங்களுக்காக உழைத்தார், ஆனால் அந்த மற்ற ஒருங்கிணைப்பாளர்களில் சிலர் பிசிசி தலைவர் ஆனார்கள், சிலர் அமைச்சர்கள் ஆனார்கள், சிலர் எம்எல்ஏ ஆனார்கள், எல்லோரும் எங்கெங்கோ எம்பி, எம்எல்ஏக்கள் ஆனார்கள், ஆனால் கிஷோரி ஜி 40 ஆண்டுகளை அமேதி மக்களுக்கு வழங்கினார். அமேதி மக்களுக்காக அவர் தனது அரசியல் வாழ்க்கையை துறந்தார்.’ என்று பாராட்டினார்.

ரேபரேலிக்கு நடப்பது அமேதிக்கும் நடக்கும்

‘நான் ரேபரேலி எம்பி ஆவேன். ஆனால், ரேபரேலியில் என்ன நடக்குமோ அது அமேதியிலும் நடக்கும்’ என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார். ரபரேலிக்கு 10 ரூபாய் வந்தால் அமேதிக்கும் அதே அளவு ரூபாய் வரும். நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்.’ என்று ராகுல் காந்தி அமேதி மக்களிடம் கூறினார்.

மேலும் படிக்க | பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News