மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 17, 2024, 04:44 PM IST
  • 2024 மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக மோடி வருவார் -ராஜ்நாத் சிங்
  • காங்கிரஸ் தான் அரசியலமைப்பில் அதிகபட்ச திருத்தங்களைச் செய்துள்ளது -ராஜ்நாத் சிங்
  • பிரதமர் மோடி தனக்காக ஓட்டு கேட்கவில்லை, அமித்ஷாவுக்காக ஓட்டு கேட்கிறார் -அரவிந்த் கெஜ்ரிவால்
மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்.. title=

Lok Sabha Election 2024: பிரதமர் நரேந்திர மோடி தனக்காக வாக்கு கேட்கவில்லை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக வாக்கு கேட்கிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர். முதலில் அமித் ஷா பதிலளித்த நிலையில், தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.

2024 அல்ல.. 2029லும் அவர் தான் பிரதமர் -ராஜ்நாத் சிங்

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவரும், இந்தியாவின் பொருளாதாரத்தை உலகிலேயே வலிமையானதாக மாற்றியவருமான நபரை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் சொகிறேன்சொல்கிறேன். 2029-லும் அவர் இந்தியாவின் பிரதமராக மீண்டும் வருவார் என்று என்னால் தெளிவாகக் கூற முடியும். 

அதேநேரத்தில் மோடி அரசை பாராட்டிய ராஜ்நாத் சிங், "2014ல் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2027ல் மூன்றாவது இடத்தில் இருக்கும். நாம் வல்லரசு ஆக விரும்பினால், ஒட்டுமொத்த உலக நலனுக்காக யாரையும் அச்சுறுத்தக்கூடாது எனக் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியது காங்கிரஸ் தான் -ராஜ்நாத் சிங்

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைத்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்தக் கூற்றுகள் குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், "அவர்கள் (காங்கிரஸ்) தான் அரசியலமைப்பில் அதிகபட்ச திருத்தங்களைச் செய்துள்ளதாகக் கூறினார். அரசியலமைப்பின் முகப்புரையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம், ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் 1976 இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அதில் மாற்றங்களைச் செய்தது என்றார்.

மேலும் படிக்க - பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்

அடுத்த பிரதமர் யார்? அரவிந்த் கெஜ்ரிவால் என்ன கூறினார்..

நேற்று (மே 16, வியாழக்கிழமை) லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்பொழுது, பேசிய கெஜ்ரிவால், "இந்த தேர்தலி பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷா பிரதமராவார் என்று கூறினார். பிரதமர் மோடி தனக்காக ஓட்டு கேட்கவில்லை, அமித்ஷாவுக்காக ஓட்டு கேட்கிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னார்.

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளேன். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி.  மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 2-3 மாதங்களில் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று அவர் கூறினார். மேலும் பாஜகவினர் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என பாஜகவை கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் படிக்க - வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News