‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமேதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானி

Lok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2024, 05:26 PM IST
  • தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில், ராகுல் மீண்டும் வயநாட்டில் நின்றார்.
  • அங்கு ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
  • சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் அவரை ரேபரேலியில் வேட்பாளராக அறிவித்தது.
‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமேதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானி title=

Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது. உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு, பாஜக சார்பில் சிட்டிங் எம்பி ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மாவும் களத்தில் உள்ளனர். அமேதியில் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. 

அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது. எனினும், அமேதியின் தற்போதைய எம்பி ஆக இருக்கும் ஸ்மிருதி இரானி, தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவுடன்தான் போட்டியிடுவதாக கூறி வருகிறார். 

ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “நான் சிறார் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை,"  என கூறினார். ராகுல் காந்தி தனது முன்னாள் தொகுதிக்கு பதிலாக அருகிலுள்ள ரேபரேலியில் போட்டியிட முடிவு செய்தது பற்றியும், வெகுவாக பேசப்பட்ட நிலையில், பிரியங்கா இன்னும் தேர்தல் போட்டியில் களமிறங்காதது பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். 

மேலும் படிக்க | CAA மூலம் 350 பேருக்கு குடியுரிமை... அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் ‘சில’ மாற்றங்கள்!

“நான் போட்டியிடுவது பிரியங்கா வத்ராவுடன்தான். அவர்தான் திரைக்கு பின்னாலிருந்து போட்டியிடுகிறார். அவர் தம்பியாவது குறைந்தபட்சம் முன்னால் நின்று போட்டியிட்டார். 2014-ம் ஆண்டிலும் ராகுல் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்” என்று ஸ்மிருதி இரானி கூறினார்.

காந்தி குடும்பத்தின் கோட்டைகளாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் பிரியங்கா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்த பலரும், அவர்களது விசுவாசிகளும் மக்களவை எம்பி -களாக இருந்துள்ளனர். ராகுல் மற்றும் பிரியங்காவின் தாயான சோனியா காந்தி, அமேதியின் முன்னாள் எம்பி ஆவார். அவர் ரேபரேலியில் இருந்து தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார். ராகுல் காந்தி 2004ல் அமேதியில் அறிமுகமானார். அவர் அங்கு தொடர்ச்சியாக 3 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2019ல் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோற்கடிக்கப்பட்டார். எனினும், 2019 -இல் ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) இருந்தார்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில், ராகுல் மீண்டும் வயநாட்டில் நின்றார். அங்கு ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் அவரை ரேபரேலியில் வேட்பாளராக அறிவித்தது. இதற்கிடையில், அமேதியில் இரானிக்கு எதிராக கிஷோரி லால் சர்மா களமிறக்கப்பட்டார். 

இரு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ரேபரேலியில் பாஜக, 2019-ல் சோனியா காந்தியிடம் தோல்வியடைந்த உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. விஐபி தொகுதிகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுக்கும் தங்கள் இருப்பை நிலைநாட்ட நினைக்கும் தொகுதிகளாக பார்க்கப்படுவதால், அங்கு இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News