Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குபதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர். லக்னோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இரு தலைவர்களும், முதல் நான்கு கட்டங்களில் பாஜக வெற்றி பெறாது என கூறினர். ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷனை இரட்டிப்பாக்குவதாகவும் கார்கே உறுதியளித்தார். ஒடிசாவில் பிரசாரம் காரணமாக ராகுல் காந்தி இன்று இந்திய கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
“பாஜக இது வரை நடைபெற்ற மக்களவை தேர்தலின் (Lok Sabha Election 2024) நான்கு கட்டங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெறாது... அவர்களுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு பாஜகவிடம் பதில் இல்லை. முதலீடு, டிஃபென்ஸ் எக்ஸ்போ என்ற பெயரில் பொய்க் கனவுகளைக் காட்டி, ஜி - 20 கூட்டங்களில் போலியான விஷயங்களை விளம்பரப்படுத்துகிறார்கள்” என அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்தார்.
அகிலேஷ் யாதவ் மேலும் கூறுகையில், வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4க்குப் பிறகு 'பொற்காலத்தை' சந்திக்க உள்ள மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். "ஜூன் 4-ம் தேதி தொடங்கும் பொற்காலம், 'பத்திரிக்கை சுதந்திரத்தின்' நாளாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக விரும்புகிறேன். இந்திய கூட்டணி உத்தரபிரதேசத்தில் 79 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், இந்த முறை ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டம். "நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் அடிமைகளாகி விடுவோம். ஜனநாயகம் இல்லை, எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் இருந்தால், உங்கள் சித்தாந்தம் கொண்ட ஒருவரை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? பாஜக தலைவர் போட்டியிடுகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள்" என்று கார்கே கூறினார்.
மேலும் படிக்க | அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா
பிரதமர் நரேந்திர மோடி அரசு PMGK அன்ன யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச ரேஷன் வழங்குவதாகவும், தற்போது வழங்கப்படும் 5 கிலோவுக்கு பதிலாக 10 கிலோ ரேஷன் வழங்குவதாகவும் கார்கே கூறினார்.
முதல் நான்கு கட்ட தேர்தல்களில் இந்திய கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகவும், மக்கள் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளதாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி ஆட்சி அமைக்கும். இது மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலாகும். இதன் மூலம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாகஉருவாகி, வரும் சந்ததியினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதிர்காலத்தைக் கட்டமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, உங்களுக்காக நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுகிறோம் என கார்கே கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலின் நான்கு கட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் உழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ