Bank Holidays in December: டிசம்பரில் 18 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!

Bank Holidays in December: டிசம்பர் 2023ல், 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.  மாநில வாரியாக விடுமுறை நாட்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.   

Written by - RK Spark | Last Updated : Nov 27, 2023, 10:50 PM IST
  • டிசம்பர் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறைகள்.
  • ஆறு நாள் வேலைநிறுத்தம் இருக்கும்.
  • ஆன்லைன் வங்கிச் சேவைகள் பாதிப்பு இருக்காது.
Bank Holidays in December: டிசம்பரில் 18 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!  title=

Bank Holidays in December: நவம்பர் மாத இறுதி நெருங்கி வருவதால், ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் விரைவில் வர உள்ளது.  ஒவ்வொரு மாதமும் போலவே, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் டிசம்பர் தொடக்கத்திற்கு முன் வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டது. டிசம்பர் 2023ல் ஐந்து பண்டிகை விடுமுறைகளுடன், நாட்டில் உள்ள வங்கிகளும் 5 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். டிசம்பரில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி விடுமுறைகளைத் தவிர, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) 6 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, டிசம்பர் 2023ல் வங்கிகள் 18 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். உள்ளூர் மற்றும் தேசிய விடுமுறை நாட்களிலும் இது பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?

வங்கி விடுமுறைகள் இரண்டு வகைப்படும். முதல் வகை அரசு விடுமுறை, இரண்டாவது தேசிய விடுமுறை. அரசு விடுமுறைகள் மாநிலம் சார்ந்தவை மட்டுமே, அவை நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வங்கி விடுமுறைகளாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதேசமயம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாத தேசிய விடுமுறைகள்தான். டிசம்பர் 4-11 முதல் SBI, PNB, BoB, BoI போன்றவை நாடு தழுவிய வேலைநிறுத்தங்களால் வங்கிச் சேவைகளும் பாதிக்கப்படும். தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடரும். மக்கள் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, வங்கி சம்பந்தமான வேலையை முன் கூட்டியே முடித்து கொள்ளுங்கள். 

டிசம்பர் 2023 வங்கி விடுமுறைகளின் பட்டியல்:

- டிசம்பர் 1, 2023: மாநில தொடக்க நாள்/ பழங்குடியின நம்பிக்கை தினம் (அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து).
- டிசம்பர் 3, 2023: ஞாயிறு.
- டிசம்பர் 4, 2023: புனித பிரான்சிஸ் சேவியர் (கோவா) விழா.
- டிசம்பர் 9, 2023: சனிக்கிழமை.
- டிசம்பர் 10, 2023: ஞாயிறு.
- டிசம்பர் 12, 2023: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா).
- டிசம்பர் 13, 2023: லாசூங்/ நம்சூங் (சிக்கிம்).
- டிசம்பர் 14, 2023: லாசூங்/ நம்சூங் (சிக்கிம்).
- டிசம்பர் 17, 2023: ஞாயிறு.
- டிசம்பர் 18, 2023: யு சோசோ தாமின் (மேகாலயா) இறந்த நாள்.
- டிசம்பர் 19, 2023: கோவா விடுதலை நாள் (கோவா).
- டிசம்பர் 23, 2023: சனிக்கிழமை.
- டிசம்பர் 24, 2023: ஞாயிறு.
- டிசம்பர் 25, 2023: கிறிஸ்துமஸ் (இந்தியா முழுவதும்).
- டிசம்பர் 26, 2023: கிறிஸ்துமஸ் (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா).
- டிசம்பர் 27, 2023: கிறிஸ்துமஸ் (நாகாலாந்து).
- டிசம்பர் 30, 2023: யு கியாங் நங்பா (மேகாலயா).
- டிசம்பர் 31, 2023: ஞாயிறு.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News