ரூ.5,ரூ.10, ரூ.20 நாணயங்கள் இனி செல்லாதா: தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் ஆர்பிஐ அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ரிசர்வ் வங்கி:
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் (2000 Rupees) நோட்டுகள் செல்லாது என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், புழக்கத்தில் உள்ள சில நாணயங்கள் செல்லாது என செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து மக்கள் மத்தியில் குழப்பம் இருந்து வரும் நிலையில், அதற்கான விளக்கம் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயம் (10 RS Coin) செல்லாது என்ற செய்தி பரவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி (Reserve Basnk Of India) இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தியாவில் ரூ.10, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.20 நாணயங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வகையான நாணயங்களும் முறையான நாணயங்கள்தான். அவற்றை யாரும் போலி என்று கூறி ஏற்றுக்கொள்ள மறுக்க முடியாது.
எந்த நாணயங்கள் தடை:
தடை செய்யப்பட்டுள்ள நாணயங்களைப் பற்றி பேசுகையில், 25 பைசா அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள நாணயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் 50 பைசா நாணயங்கள் இப்போது வெளியிடப்படுவதில்லை. ஆனால் அவை இன்னும் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிழிந்த நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
இதயனிடையே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, சிதைந்த நோட்டுகளை (Mutilated Rupees) எந்த வங்கி கிளையிலும் எளிதாக மாற்றலாம். இந்த நோட்டுகளை மாற்ற வங்கிகள் மறுத்தால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோட்டின் நிலை மோசமாக இருந்தால், அதன் மதிப்பு குறைவாக இருக்கும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் முன் இந்த விதிகளை நியாபகம் வச்சுக்கோங்க!
கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தாலோ அள்ளது பாதியாவது உங்களிடம் இருந்தாலோ இதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டு உங்களுக்கு கிடைக்கும். அதேபோல் 20க்கும் மேற்பட்ட சிதைந்த நோட்டுகள் இருந்து, அவற்றின் மதிப்பு ரூ.5,000 -க்கு மேல் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். நோட்டுகளை மாற்றுவதற்கான எளிய விதி என்னவென்றால், ஒரு சிதைந்த ரூபாய் நோட்டில் பாதுகாப்பு சின்னம் இருந்தால் அவற்றை மாற்ற வங்கிகள் மறுக்க முடியாது. அதுமட்டுமின்றி பழைய நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை, இருப்பினும் நோட்டு மோசமாக எரிந்திருந்தாலோ அல்லது பல துண்டுகளாக இருந்தாலோ அவை மாற்றப்படாது. நீங்கள் வேண்டுமென்றே நோட்டை வெட்டிவிட்டதாகவோ அல்லது கிழித்துவிட்டதாகவோ வங்கி அதிகாரி உணர்ந்தால், அந்த சந்தர்பத்திலும் அவர் உங்கள் நோட்டை மாற்ற மறுக்கலாம்.
துண்டுகளாக உள்ள நோட்டுகள் / மற்றும் / அல்லது அத்தியாவசியப் பகுதிகள் விடுபட்ட நோட்டுகளையும் மாற்றலாம். இருப்பினும், இந்த நோட்டுகளின் ரீபண்ட் மதிப்பு ரிசர்வ் வங்கி விதிகளின்படி செலுத்தப்படுகிறது. அனைத்து பொதுத் துறை வங்கிக் கிளைகளிலும், அனைத்து தனியார் துறை வங்கிகளின் நாணயச் செஸ்ட் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் அனைத்து வெளியீட்டு அலுவலகங்கலிலும் எந்தப் படிவத்தையும் பூர்த்தி செய்யாமல், இவற்றை மாற்றலாம்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. 5% டிஏ ஹைக், டபுள் சம்பளம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ