மார்ச் மாதம் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!

Bank Holidays In March: இன்று முதல் புதிய மாதம் அதாவது மார்ச் தொடங்கியுள்ள நிலையில், தற்போது எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 1, 2024, 04:04 PM IST
  • மார்ச் மாதம் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை.
  • தேதி வாரியாக விவரம் லிஸ்ட் இதோ.
  • தமிழ்நாடு எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
மார்ச் மாதம் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ! title=

RBI Bank Holidays In March 2024 : பிப்ரவரி முடிவடைந்து தற்போது இன்று முதல் புதிய மாதம் அதாவது மார்ச் மாதம் தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று முதல் மார்ச் மாதம் தொடங்கி உள்ள நிலையில் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால், உடனடியாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறையை காலண்டரை ஒருமுறை சரிப்பார்க்கவும். 

இந்நிலையில் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 18 நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருக்கும் என்று ஆர்பிஐ (Reserve Bank of India) வெளியிட்ட காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனை போன்ற வேலைகளை செய்ய வங்கி விடுமுறைகளை (Bank Holidays) நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு மாதமும் ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது வங்கி விடுமுறைகளின் முழுமையாம் விவரத்தை இங்கே சரிப்பார்க்கலாம்.

மேலும் படிக்க | பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?

மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

மார்ச் 1, 2024: சாப்ச்சூர் குட் மிசோரம், வெள்ளிக்கிழமை
மார்ச் 3, 2024: வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 6, 2024: மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி தடைசெய்யப்பட்ட விடுப்பு, புதன்கிழமை
மார்ச் 8, 2024: மகா சிவராத்திரி தடைசெய்யப்பட்ட விடுப்பு (திரிபுரா, மிசோரம், தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், இட்டாநகர், ராஜஸ்தான், நாகாலாந்து, மேற்கு வங்காளம், புது டெல்லி, கோவா, பீகார், மேகாலயா தவிர), வெள்ளிக்கிழமை
மார்ச் 9, 2024: இரண்டாவது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமை 
மார்ச் 10, 2024: வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
மார்ச் 12, 2024: ரமலான் ஆரம்பம் தடைசெய்யப்பட்ட விடுப்பு, செவ்வாய்க்கிழமை
மார்ச் 17, 2024: வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமை 
மார்ச் 20, 2024: உத்தராயண அனுசரிப்பு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும், புதன்கிழமை
மார்ச் 22, 2024: பீகார் தினம், சனிக்கிழமை 
மார்ச் 23, 2024: நான்காவது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
மார்ச் 24, 2024: வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமை 
மார்ச் 25, 2024: ஹோலி பண்டிகை (கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, மணிப்பூர், கேரளா, நாகாலாந்து, பீகார், ஸ்ரீநகர் தவிர), திங்கட்கிழமை
மார்ச் 26, 2024: யாசாங் (ஒடிசா, மணிப்பூர், பீகார்), செவ்வாய்க்கிழமை
மார்ச் 28, 2024: மாண்டி வியாழன் அனுசரிப்பு தடைசெய்யப்பட்ட விடுப்பு, வியாழக்கிழமை
மார்ச் 29, 2024: புனித வெள்ளி (திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் தவிர), வெள்ளிக்கிழமை 
மார்ச் 31, 2024:  வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமை.

தமிழகத்தை பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தவிர கூடுதலாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 9ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, மார்ச் 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டு சூத்திரத்தில் மாற்றம், 0% ஆகும் அகவிலைப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News